பைசாபாத், ஜூன் 13 பைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம், பாரதிய ஜனதா கட்சி யின் பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் நேற்று (12.6.2024) மாநில தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில்,
“பாஜக முறைகேடாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போதிலும், பொதுமக்கள் சமாஜ்வாதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பைசாபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அயோத்தியில் பெற்ற சமாஜவாதி கட்சியின் வெற்றி, பாஜகவின் பிரிவினைவாத வெறுப்பு நிறைந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். பொதுமக்களின் ஆதரவு உண்மைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
அனைவரும் வியக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் நமது சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்தார். மக்களவைத் தேர்தலில் அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாட்டு மக்கள் வாக்க ளித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெறவைத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சியை மாநில மக்கள் உருவாக்கியுள்ளனர்.
மக்களவையில் பொதுமக்களின் பிரச்சினை களைப்பற்றி சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் குரல் எழுப்புவார். பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதாளச் சாக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கமும், வேலையின்மையும் உச்சத்தில் இருக்கிறது” என்றார் அவர்.
No comments:
Post a Comment