சென்னை, ஜூன் 15- கலைஞர் 100–இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காண இளைஞரணிச் செய லாளர் – அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் முன்னெ டுப்பில் தி.மு.க. இளைஞர் அணியும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி யும் இணைந்து நடத்தவுள்ள கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி வெற்றி பெற வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உரக்கப் பேச உடன் பிறப்புகளே வருக என அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப்பதிவு வருமாறு:
பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டி யெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்! சொல்லாற்றலில்தலைவர் கலைஞருக்கு அவரே நேர். கலைஞர் 100–இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காணவும் – தமிழ்ச்சமூகத்துக்கு அடையாளம் காட்டவும் தம்பி உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் தி.மு.க. இளைஞர் அணியும், கலைஞர் செய்திகள் தொலைகாட்சியும் இணைந்து நடத்தவுள்ள “என் உயிரினும் மேலான – கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி” வெற்றி பெற வாழ்த்துகிறேன்! எத்தனையோ தலை வர்களை அடையாளம் காட்டிய மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி இனி இருபாலர் கல்லூரியாக மாற்றம்
சென்னை, ஜூன் 15 சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், நந்தனம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி அதன் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் என்று மாற்றி ஆணை வழங்குமாறு அக்கல்லூரியின் முதல்வர் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்
அக்கருத்துருவை ஆய்வுசெய்து நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியை 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றியும், அக்கல்லூரியின் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் எனப் பெயர் மாற்றியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment