மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்!

14-2

மயிலாடுதுறை நகர கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவரது கண்கள் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன. 3.6.2024 காலை 12 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் எந்தவித சடங்குமின்றி புறப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், ஒன்றிய தலைவர் டி.வி.இளங்கோவன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், துணைத் தலைவர் இரெ.புத்தன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், சீர்காழி ஒன்றிய தலைவர் ஆ.ச.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள் தாஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தங்க.செல்வராஜ், தோழர் ரஷீத்கான், அண்ணாதுரை மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment