5.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இன்று டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
* மோடி தலைமையில் 400 இடங்கள் கிடைக்கும் என்ற தேர்தல் கணிப்பு பொய்யானதால், பங்கு சந்தை வீழ்ச்சி. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி நட்டம்.
* அண்ணாமலை, எல்.முருகன் தோல்வி; கொங்கு மண்டலத்தில் பாஜக மலர்ந்திடும் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்கிறது தலையங்க செய்தி.
* ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு.
* சமூக நீதியை முன்னெடுத்ததால், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள்.
* 40 இடங்களிலும் வெற்றி பெற்று, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் சாதனை.
* ராகுல் உழைப்புக்கு வெற்றி; இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்.
* மகாராட்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி. வெங்காய ஏற்றுமதி, மராத்தா இட ஒதுக்கீடு, பாஜகவின் வீழ்ச்சிக்குக் காரணம்.
* மணிப்பூரில் இரண்டு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.
* பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நிதிஷ் ஆதரவு முக்கியமானது.
* உ.பி.யில் பிரியங்காவின் பிரச்சாரம், பாஜகவின் வெற்றியை தடுத்துள்ளது.
* இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் மோடியின் தவறான செயல்களுக்கு அவரைப் பொறுப்பேற்கச் செய்திட வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமூல் 29 இடங்களில் வென்று அபார சாதனை.
* உ.பியி பாஜகவின் இடங்களை வென்ற அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியா கூட்டணிக்கான சவால் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்கிறார் கட்டுரையாளர் சுகாஷ் பால்சிகர்.
* மோடிக்கு தார்மீக, அரசியல் தோல்வி என மல்லிகார்ஜூன கார்கே கருத்து.
* அரசமைப்புச் சட்ட கட்டமைப்பைக் காப்பாற்ற இந்தத் தேர்தலில் காங்கிரஸ் போராடியது என்கிறார் ராகுல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு மட்டுமின்றி, யோகி ஆதித்யநாத்துக்கும் பின்னடைவு
* 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் உமேஷ் பாடீல்
தி இந்து:
* தேர்தல் முடிவுகள் 2024: உத்தரப்பிர
தேசத்தில் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு என்ற அகிலேஷின் முழக்கம் பா.ஜ.க.வின் ராமன் “கோஷத்தை” வீழ்த்தியுள்ளது.
தி டெலிகிராப்:
* பீம் ஆர்மி நிறுவனர் சந்திரசேகர் உத்தரப் பிரதேசத்தில் நாகினா மக்களவைத் தொகுதியில் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* பா.ஜ.க பெரும்பான்மையை இழந்த நிலையில், பதில்களை விட அதிகமான கேள்விகளுடன் பிரதமர் மோடி தற்போது உள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உ.பி.யில் மோடி அமைச்சரவையில் இருந்த ஆறு அமைச்சர்கள் ஸ்மிருதி ரானி உள்பட தோல்வி.
* உ.பி.யில் மண்டல் வேகம் இந்துத்துவா பேச்சினை உலுக்கியுள்ளது.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment