தமிழ்நாடு கிராம வங்கியின் கீழ் உள்ள பல்வேறு வட்டார வங்கிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 9,995 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 110 அதிகாரிகள் பணியிடங்களும் 377 அலுவலக உதவியாளர் பணி யிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது.
இதற்கான தேர்வு: தேர்வை இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாங்கிங் பர்சனல் செலக்சன் என அழைக்கப்படும் IBPS நடத்துகிறது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் வட்டார கிராமப்புற வங்கிகளில் P.O. (புரோபிஷனரி ஆஃபீசர்), S.O. (செக்யூரிட்டி ஆஃபீசர்) , கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு மய்யம் நடத்தி வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான வட்டார கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கிராம வங்கி, ஆந்திரா கிராம வங்கி, கேரளா கிராம வங்கி, கருநாடகா கிராம வங்கி, அருணாச்சலப் பிரதேச கிராம வங்கி, சத்தீஸ்கர் கிராம வங்கி, குஜராத் கிராம வங்கி, புதுச்சேரி கிராம வங்கி என இந்தியாவில் உள்ள மொத்தம் 47 கிராம வங்கிகளில் காலியிடங்கள் உள்ளன.
P.O., கிளார்க் அல்லது அதிகாரி கிரேடு II அல்லது அதிகாரி கிரேடு IIIஆக பணியாற்ற வாய்ப்பாக அமையும் இந்த தேர்வு குறித்த முழு விவரங்களையும் கீழே பட்டியலிடுகிறோம்.
காலியிடங்கள்: அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு): 5,585
அதிகாரி கிரேடு I: 3,499
அதிகாரி கிரேடு-II (வேளாண்மை அதிகாரி): 70
அதிகாரி கிரேடு-II (சட்டம்): 30
அதிகாரி கிரேடு-II (CA): 60
அதிகாரி கிரேடு-II (IT): 94
அதிகாரி கிரேடு-II (பொது வங்கி அதிகாரி): 496
அதிகாரி கிரேடு-II (மார்க்கெட்டிங் அதிகாரி): 11
அதிகாரி கிரேடு-II (கருவூல மேலாளர்): 21
அதிகாரி கிரேடு III: 129
வயது வரம்பு: அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
அதிகாரி கிரேட் I உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி கிரேட் II மேலாளர் பதவிக்கு 21 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி கிரேட் III சீனியர் மேனேஜர் பதவிக்கு 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர்:
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்கம் திறன் கொண்டிருக்க வேண்டும்.
உதவி மேலாளர் பணிக்கு
வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் பட்டம்,கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி இயக்கம் திறன் கொண்டிருக்க வேண்டும்
மேலாளர் பதவிக்கு: மேற்கண்ட தகுதிகளுடன் இரண்டு வருடம் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும்
சீனியர் மேனேஜர் பதவிக்கு: மேலாளருக்கான தகுதிகளுடன் குறைந்த பட்சம் 5 வருடங்கள் வங்கியில் அல்லது ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் அலுவலராக பணி யாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பப்படும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூன் 07 முதல் ஜூன் 26 வரை https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கான விரிவான அறிக்கையை இங்கே கிளிக் செய்து படித்துக்கொள்ளுங்கள்.
தேர்வு முறை: இந்த பணியிடங் களுக்கு பிரிலிமினரி மற்றும் மெயின் ஆகிய இரண்டு தேர்வுகளை இணைய வழியில் எதிர்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் மாதத் திலும் முதன்மை தேர்வு செப்டம்பர் மாதத்திலும் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு :₹175/-
மற்றவர்களுக்கு: ₹850/-
No comments:
Post a Comment