கண்காணிப்புக்கான…
உலகளாவிய காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்பை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ‘திரிஷணா’ என்ற செயற்கைக் கோளைச் செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நடவடிக்கை…
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரூ.2,820 கோடியில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்கள் வாங்க திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல்.
உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத் தவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நீட்டிப்பு…
தமிழ்நாட்டில், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க வருகிற 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமை சங்கம் தெரிவித்துள்ளது.
உதவித் தொகை
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்று அனைத்து வழக்குரைஞர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீடிக்கும்…
தமிழ்நாட்டில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
அதிகரிப்பு
கல்விக்காக அமெரிக்காவிற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என அமெரிக்க தூதரக ஆலோசகர் ரஸல் பிரவுன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment