அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு!

featured image

காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலமும், தேசிய தேர்வு முகமை மூலமும் நீட் தேர்வு ஊழலை மோடி அரசு மூடி மறைக்க தொடங்கி உள்ளது.

வினாத்தாள் கசியவில்லை என்றால், பீகாரில் வினாத்தாள் கசிவுக்காக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்?. வினாத்தாள் விற்பனையில் ஈடு படும் கல்வி மாபியாவுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம்வரை கொடுக்கப்பட்டதை பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது.

அதுபோல், குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மய்யம் நடத்திய ஒருவர், ஒரு ஆசிரியர், மற்றொருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற வாளிகளுக்கிடையே ரூ.12 கோடி பரிமாற்றம் நடந்ததை குஜராத் காவல்துறை கண்டுபிடித்தது.

மோடி அரசு சொல்வதுபோல், வினாத்தாள் கசியவில்லை என்றால், இந்த கைது நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது?.
தகுதியான மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிப்பதை தடுப்ப தற்காகவே வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் மற்றும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தோன்றுகிறது.
– இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

No comments:

Post a Comment