அய்தராபாத். ஜூன் 13- அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடங்கிய இரு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த விமான சேவையை நிறுத்த முடிவெடுத்ததாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜனவரி 21-ஆம் தேதி அயோத்தி ராமன் கோயில் பிராண பிரதிஷ்டை நாளில் தலைநகா் டில்லியில் இருந்து அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது.
மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்பூா், பெங்களூரு, பாட்னா, தா்பங்கா நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை அந்நிறுவனம் பிப்ரவரியில் தொடங்கியது.
இரு மாதங்களுக்கு அய்தராபாதில் இருந்து தொடங்கப்பட்ட அயோத்தி விமான சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகைக் குறைபாட்டால், விமானப் போக்குவரத்து பெரும்பாலான இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment