‘நீட்’டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் – துண்டறிக்கை தயார்
‘நீட்’டை நீக்கக் கோரி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 18.6.2024 அன்று சென்னையில் நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையைத் துண்டறிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் விநியோகித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கழக பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம். (துண்டறிக்கை நான்கு பக்கங்களில் வடிவமைக்கப்பட்டு pdf வடிவில் அனுப்பப்பட்டுள்ளது)
மேலும், இதே அறிக்கை எட்டு பக்கங்களில் குறு வெளியீடாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அதைப் பெரியார் புத்தக நிலையத்தில் வாங்கியும் விநியோகிக்கலாம்.
தமிழர் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழக இளைஞர் அணி தோழர்களே பெருமளவில் பங்கேற்க செய்யுமாறு மாவட்டத் தலைவர், செயலாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment