ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1: ‘என்.டி.ஏ.’ கூட்டணியை விட எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி அதிக கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறதே?
– வே.ராமலிங்கம், வந்தவாசி
பதில் 1: உண்மையாக வெற்றி பெற்றவர்களுக்கு அறவழிப்படி உரிமை அதிகமல்லவா? இவர்களது வெற்றி ‘இரவல் வெற்றி’ அல்லவே! அதனால்தான்!

கேள்வி 2: ‘ஜெய் சிறீராம்’ போய் ‘ஜெய் ஜெகன்னாத்’ வந்துவிட்டதே?
– மா.வேலுசாமி, திருவண்ணாமலை
பதில் 2: பரிதாபத்திற்குரிய இராமன் சம்பூகன்களால் மீண்டும் வனவாசம் சென்றுவிட்டார் போலும்! சீசன்படி ஒடிசா கடவுள் இப்போது வாக்கு வங்கி வணிக மூலதனமாகிவிட்டார் போலும்!

கேள்வி 3: இனி சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. என்ன ஆகும்? பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?
– ச.ராஜேந்திரன், திருநெல்வேலி
பதில் 3: பொறுத்திருந்து பார்ப்போம் – பாருங்கள்!

கேள்வி 4: அயோத்தியில் ஜெய் சம்பிதான் (வாழ்க அரசமைப்பு) என்ற அம்பேத்கரிய முழக்கம் வெற்றி பெற்றுள்ளதே?
– மு.சந்திரன், திருச்சி
பதில் 4: இறுதிச் சிரிப்பே எப்போதும் வெற்றிச் சிரிப்பாகும்!

கேள்வி 5: மேற்கு வங்கத்தில் நண்பகல் வரை 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருந்த பா.ஜ.க. திடீரென 11 இடங்களைப் பெற்றது எப்படி?
– மெ.சரவணன், சென்னை
பதில் 5: என்ன வித்தைகளோ யாமறியோம். எப்படி ஜெயிக்கிறார்கள், புரியவில்லையே?

கேள்வி 6: ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் கடும் உழைப்பு ஒன்றியத்தில் ஆட்சிக்கட்டில் வரை எட்டாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் உள்ளதே?
– வ.சுதாகர், மயிலாடுதுறை
பதில் 6: பயன்படுத்திடத் தயங்கியவர்கள் யோசிக்க வேண்டிய, வருந்த வேண்டிய செய்தி இது.

கேள்வி 7: இம்முறை டில்லியில் கெஜ்ரிவாலின் பேச்சு எடுபடவில்லையே?
– ந.பகலவன், பாளையங்கோட்டை
பதில் 7: டில்லி “கன்னாட் பிளேஸ்” அனுமானுக்கு அவர் மீது என்ன கோபமோ? யாரறிவார்?

கேள்வி 8: தொல்.திருமாவளவனையும், ஆ.ராசாவையும் தேர்தலில் தோற்கடிக்க மூன்று ஆண்டுகளாகவே திட்டமிட்டார்களாமே, அப்படி என்ன திட்டமாக இருக்கும்?
– அ.சண்முகம், மதுரை
பதில் 8: “பாதக் குறடுகளால் பன்னிரு அடிகளுக்குப்” (புலமைப்பித்தன் மொழி) பதில், வாக்குகளால் – வெற்றிக் கணைகள் மூலம் நல்ல பதிலடி போதாதா? தலையில்லா முண்டங்கள் பற்றி விட்டுத் தள்ளுங்கள்!

கேள்வி 9: “என் அப்பா பெயர் கருணாநிதியாக இருந்திருந்தால் நான் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பேன்” என்று வாரிசு அரசியலை குத்திக் காட்டுகிறாரே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்?
– வி.பிரபாகரன், வேலூர்
பதில் 9: இந்த அரை வேக்காடுகளைப் பற்றி கேள்விகேட்டு எனது பேனாவின் மைத்துளிகளை இப்படி வீணடிக்கலாமா – அவைகள் கீழ்ப்பாக்கம் காப்பகத்திலிருந்து தப்பிய மனநிலையாளர்கள். பரிதாபத்திற்குரியவர்கள்! விட்டுத் தள்ளுங்கள்!

கேள்வி 10: இனி மோடியின் மடியில் இருக்கும் மீடியாக்களின் (கோடி) எதிர்காலம் என்னவாக இருக்கும்?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 10: சொல்லிப் பழகிய பொய்யர்கள் இனி புதுப்புது பொய் மூட்டைகளைத் தயாரிக்க அஞ்சவா போகிறார்கள்! குத்தூசி – கோணி ஊசி எப்போதும் உங்களிடம் தயாராக இருக்கட்டும்!

No comments:

Post a Comment