திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

7-10

மூன்று ஆண்டுகளில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை, ஜூன் 8- அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1551.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளா கத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்ட அரங்கில் தொழி லாளர் நலத்துறை அமைச் சர் சி.வி.கணேசன் தலை மையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதள செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 7.6.2024 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

“தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நல வாரியங்களில் கடந்த ஜூன் 6ஆம் தேதி நிலவரப்படி 44,09,439 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

மாவட்ட அளவில், பதிவு, புதுப்பித்தல், மனுக்கள் பெறுதல், பணப்பயன்களை வங்கிக் கணக்குக்கு அனுப்புதல் ஆகிய பணி கள் 40 தொழிலாளர் உதவி ஆணையர்களால் இணையதள வாயிலாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இணையதள மென்பொ ருள் செயல்பாட்டுக்காக, அய்ந்து சர்வர்கள் தமிழ் நாடு மின்னாளுமை முகமை வாயிலாக பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இணையதள செயல் பாட்டினை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில தரவுகள் மய்யத்திடம் (TNSDC) க்ளவுட் சர்வர் கள் பெறப்பட்டு அவற் றில் இணையதள தர வுகள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வாரிய இணையதள சர்வர் தொழில்நுட்ப காரணத்தால் இயங்காமல் இருந்து, பழுதுபார்க்கப்பட்டு கடந்தாண்டு டிச.26 முதல் இயங்கி வருகிறது. சர்வர் பழுது காரணமாக இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மறு பதிவேற்றம் செய்து, பதிவு உள்ளிட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நிலுவை மனுக்களுக்கான ஆவணங்களை தொழிலா ளர்களிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்ய உதவி ஆணையர் அலுவலகங் களில் சிறப்பு உதவி மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாளி தழ்களில் செய்தி வெளி யிடப்பட்டுள்ளது. ஏற் கெனவே ஒப்புதல் அளிக்கப் பட்ட விண்ணப்பங்களுக்கு, மீண்டும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தொழிலாளர்களை கோர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் செயல்படும் இ-சேவை மய்யங்களிலும் கட்டணமினறி தொழிலா ளர்களின் ஆவணங்களை வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
இதற்கு தொழிலாளர் களிடம் இருந்து ஓடிபி பெறும் முறை நீக்கப் பட்டு எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆதார் எண் சரி பார்க்கும் பணியை கைரேகை வாயிலாக சரி பார்க்கும் வகையில் 45 பயோமெட்ரிக் சாதனங்கள் எல்காட் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப் பேற்ற 3 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழி லாளர்கள் நலவாரியங்களில் புதியதாக 16,00,499 தொழிலாளர்கள் உறுப்பினர் களாக பதிவு செய்துள்ளனர்.
மேலும், 18,46,945 தொழிலாளர்களுக்கு ரூ.1551 கோடியே 81 லட்சத்து 70,338 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் முடித்து, நலத்திட்ட உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment