சிதம்பரத்தில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

சிதம்பரத்தில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

13-2

சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் காந்தி சிலை அருகில் 7.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, குடிஅரசு – சுயமரியாதை இயக்க நற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாவட்ட ப.க. தலைவர் கோ. நெடுமாறன், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலர் வி.எம்.சேகர், நகர மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.ராஜா ஆகியோர் உரை யாற்றியபின் – கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் திருமுட்டம் ஒன்றியத் தலைவர் கு.பெரியண்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் தமீமுன் அன்சாரி, புவனகிரி அ.இராமலிங்கம், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment