கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சூழலில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உயர் அமைப்புகள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஊடகங்களின் கருத்துக் கணிப்பு பொய்யாகும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், சோனியா நம்பிக்கை.
* தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து இவ்வளவு சர்ச்சைகள் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக பாஜக மாற்றியுள்ளது. ஆனால் மக்கள் புதிய ஆட்சிக்கு தயாராகி விட்டனர் என அகிலேஷ் பேச்சு.
* மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்திய அணித் தலைவர்கள் டில்லியில் சந்திக்க உள்ளனர்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவது தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
தி இந்து:
* விசாரணை அமைப்புகள் சரியான நேரத்தில் கைது செய்யாததால், நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றனர் என மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே காட்டம்.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment