வேளாண்துறை மேம்பாட்டிற்கு விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

வேளாண்துறை மேம்பாட்டிற்கு விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்

சென்னை, ஜூன் 12- இந்தியாவில் ஏற்கனவே பருவமழை தொடங்கியுள்ள சூழலில் சராசரி மழை பெய்யும் என்று வானிலை மய்யம் கணித்துள்ளது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பதோடு விளைச்சலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விவசாயிகளின் அன்பையும், நம்பகத்தன்மையையும் பெற்று இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதி பிராண்டாகத் திகழும் சோனாலிகா, தனது ஹெவி டூட்டி டிராக்டர்கள் மூலம் புதிய வளர்ச்சி அத்தியாயத்தை மே 24இல் எழுதியுள்ளது.
இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 13,338 டிராக்டர்களை விற்பனை செய்து உள்நாட்டு சந்தையில் 5.2 சதவீத வளர்ச்சியை எட்டி, தொழில்துறை கணிப்பையும் மிஞ்சியுள்ளது.

இப்புதிய சாதனை குறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் ரமண் மிட்டல் கூறுகையில்:
வேளாண் சூழமைவில் மழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்புக்கு மழை அவசியமாகும். இத்துடன் புதுயுக தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
இத்தகைய நுட்பங்களை அளிப்பதில் நிறுவனம் முன்னோடியில் திகழ்கிறது. விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டம் ஜூன் 24இல் தொடங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் காலங்களில் புதிதாக ஹெவி டூட்டி டிராக்டர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன” என்றார்.

No comments:

Post a Comment