அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலி ருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்!
தந்தை பெரியாரவர்கள் 18.12.1948ஆம் நாள் நள்ளிரவில் இரண்டரை மணிக்கு குடந்தையில் கைதாக்கப்பட்ட போது நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கை:-
“பத்தாவது தடவையாக என்னை எனது நண்பர்களுடன் கைது செய்து சிறைப்படுத்தி அழைத்துச் செல்லப்படுகிறேன். இந்த நிலையில் நான் எனது மக்களுக்கு சொல்லக் கூடியது என்னவென்றால், இந்த நெருக்கடியான சமயத்தில் ஒவ்வொரு திராவி டனும், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டியது அவசியமாகும். சர்க்கார் அடக்குமுறை மூர்த்தண்யம் உதயமாகிவிட்டது. இந்த அடக்குமுறை எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் அதை முகம் கொடுத்து சமாளித்தால்தான், திராவிடர்களின் மானம் மேலும் பறி போகாமலிருக்க முடியும். அதைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் இல்லையே என்று சளைக்காதீர்கள்! எந்த நிலையிலும் சமாதான பங்கம், ஒழுங்கு தவறு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.”
குடிஅரசு – 25.12.1948
No comments:
Post a Comment