ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ்
அமராவதி, ஜூன் 13- மாநிலங்களவையில் தங்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மசோதாக்களை நிறைவேற்ற முடியாது என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தெரிவித்தது.
மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அந்தக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை ஒன்றிய அரசுக்கும், பாஜகவுக்கும் நினைவுபடுத்துகிறோம். ஆந்திரம் மற்றும் நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்.
பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு: பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பதாக ஏற்கெனவே கட்சித் தலைவா் ஜெகன்மோகன் தெரிவித்துவிட்டார். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் குறித்த நிலைப்பாட்டை தற்போது வரை எடுக்கவில்லை என்றார்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினா்கூட இல்லை. முந்தைய ஆட்சியில் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், மசோதாக்களை நிறைவேற்ற ஒடிசாவின் அப்போதைய முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment