ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் ‘க’ போனால் விதையாகும். ஆம். எத்தனையோ எண்ணங்கள் கவிதை நூல் மூலம் விதைக்கப்படுகின்றன. இந்தக் கவிதையில், ‘வி’ போனால் கதையாகும். ஆம், எத்தனையோ கதைகள் இந்த கவிதை நூலில் உருவாக்கப்படுகின்றன. ‘தை’ போனால் கவியாகும். ஆம், கவிதானே கவிதையை எழுத முடியும். எனினும், எனக்குக் கவிதை தெரியாது.
– (இப்படித் துவக்கவுரையிலேயே, பார்வையாளர்களை மட்டுமல்ல, மேடையில் அமர்ந்த புலவர் பெருமக்களையும் கலைஞர் அசத்தி அமர்ந்தார்.)
Sunday, June 2, 2024
கவிதை எனக்குத் தெரியாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment