ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி

featured image

அய்.சி.எம்.ஆர். கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, டெக்னீசியன் 14, ஆய்வக உதவியாளர் 22 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: பதவி வாரியாக 18 – 25, 18 – 28, 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
தேர்வு மய்யம்: அய்தராபாத்
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 16.6.2024
விவரங்களுக்கு: icmrnin-recruitment.aptonline.in

No comments:

Post a Comment