ஹிந்தி பேசும் மாநிலங்கள்-ஹிந்தி பேசாத மாநிலங்கள் வெற்றி விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ஹிந்தி பேசும் மாநிலங்கள்-ஹிந்தி பேசாத மாநிலங்கள் வெற்றி விவரம்

featured image

டில்லி, ஜூன் 5- இந்திய மக்களவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் நேற்று (4.5.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிகை விவரங்களின் அடிப்படையில், வட மாநிலங்களின் தேர்தல் வெற்றிகள்

வட இந்திய மாநிலங்களின் நிலவரம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்விநேற்று இரவு 11:30 நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி 36 இடங்களில் வெற்றியும், 1 இடத்தில் முன்னிலையும் வகித்தது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 5,98,526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் ஜெய்வீர் சிங் 3,76,887 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உ.பி.யின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல். ஷர்மா 5,39,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 3,72,032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நாகினா மக்களவைத் தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷிராம்) வேட்பாளர் சந்திரசேகர் 5,12,552 வாக்குகள் பெற்று 1,51,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட பிரதமர் நரேந்திர மோதி 1,52,513 அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸின் ராகுல் காந்தி 687,649 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் 297,619 பெற்று தோல்வியடைந்துள்ளார்.

கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 6,42,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுப்ரதா பதக் 4,71,370 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

மதுரா தொகுதியில் பாஜகவின் ஹேமமாலினி 5,10,064 வாக்குகள் பெற்று, காங்கிரஸின் முகேஷ் தங்கரை விட 2,93,407 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மணிப்பூர்

மணிப்பூரின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் அய்ந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தியைவிட, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் மியான் அல்தாப் அகமது 5,21,836 வாக்குகளை பெற்று, 2,81,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேநேரம், பாரமுல்லா தொகுதியில் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா 2,68,339 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக்கிடம் 2,04,142 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

அசாம்

பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேகாலயா

மேகாலயாவின் 2 தொகுதிகளில் ஒன்றான ஷில்லாங் தொகுதியில், மக்கள் குரல் கட்சி வேட்பாளர் டாக்டர் ரிக்கி ஆண்ட்ரூ சிங்கன் 3,71,910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
துரா தொகுதியில் காங்கிரஸின் சலேங் சங்மா தேசிய மக்கள் கட்சியின் அகதா சங்மாவைவிட 1,55,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மிசோரம்

மிசோரமில் உள்ள ஒரே தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் (Zoram People’s Movement) ரிச்சர்ட் வன்லால்மங்காஹியா 68,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

நாகாலாந்து நாகாலாந்தில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸின் சுபோங்மரேன் ஜமீர் வெற்றி பெற்றுள்ளார்.

பீகார்

பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சி 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒடிஷா

ஒடிஷாவில் இரவு 12 மணி நிலவரப்படி, பாஜக 19 இடங்களில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கிறது. காங்கிரஸ் 1 இடத்தில வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தின் 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. 11 இடங்களில் வென்றுள்ள பாஜக இரவு 12 மணி நிலவரப்படி 1 இடத்தில் முன்னிலையில் இருந்தது.

மேலும் இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment