நாட்டின் முதல் பறவைக்காய்ச்சல் மேற்குவங்கத்தில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

நாட்டின் முதல் பறவைக்காய்ச்சல் மேற்குவங்கத்தில் கண்டுபிடிப்பு

featured image

கோல்கத்தா, ஜூன் 13- மேற்கு வங்கத்தில் நான்கு வயது குழந்தைக்கு ஹெச்9என்2 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் என உலக சுகாதார அமைப்பு அறிவித் துள்ளது.
2019-க்கு பிறகு உலக சுகாதார அமைப்பு இந்தி யாவில் பறவை காய்ச்சல் தொற்றை அறிவிக்கிற இரண்டாவது முறை இது.

குழந்தை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.பிப்ர வரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சுவாசக் கோளாறு, அதீத காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறு பிரச்னைகளும் இருந்தன.

மூன்று மாதங்களுக்கு பிறகு நலம் பெற்றுள்ள குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து இந்த தொற்றுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் எனச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தையுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கோ சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கோ எந்த தொற்றும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஹெச்9என்2 என்பது காற்று மூலம் தொற்றக்கூடிய கிருமி. பொதுவாக பறவை களில் காணப்படும். விலங்குகளுக்கு ஏற் படும் இந்தவகை தொற் றால் மனிதர்களும் சில சமயங்களில் பாதிக்கப் படுகிறார்கள்.

ஆங்காங்கே உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறி வுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment