சென்னை, ஜூன் 13 விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்று கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜயதாரணி விலகியதால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் நேற்று (12.6.2024) பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘‘கடந்த 2021 தேர்தலில் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் விஜயதரணி வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றிக்கு கார ணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகள், வாக்காளர்களுக்கு நன்றி’’ என்றார். தாரகை கத்பர்ட் கூறியபோது, ‘‘காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையாறு அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதியில் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பாடுபடுவேன்’’ என்றார்.
No comments:
Post a Comment