நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நியமனம் நேர்மையானது அல்ல காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நியமனம் நேர்மையானது அல்ல காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 12 பிரதமா் மோடியின் 3-ஆவது முறை ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜுவும், அந்தத் துறை இணையமைச்சராக அா்ஜுன் ராம் மேக்வாலும் நியமிக்கிப்பட்டுள்ளனா்.
இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (11.6.2024) வெளியிட்ட பதிவில், ‘கடந்த காலங்களில் நாடாளுமன்ற அலுவல்கள் எவ்வாறு நடைபெற்றதோ, அதைவிட இந்த முறை நாடாளுமன்றம் மாறுபட்டு செயல்பட வேண்டும் என்று நம்புகிறோம் ஆனால் அத்துறையின் அமைச்சராக உள்ள நபர்களின் கடந்த கால செயல்பாடுகள் அந்த துறைகளுக்கு நற்பெயரை ஏற்படுத்தவில்லை, அதே போல் தற்போதும் இவர்களின் நியமனங்கள் நாட்டுமக்களுக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மக்களின் விருப்பதையும், தீா்ப்பையும் ‘இந்தியா’ கூட்டணி உறுதியுடன் பிரதிபலிக்கும்’ என்றார்.

10 மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானதாக அறிவிப்பு
புதுடில்லி, ஜூன் 12 அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 10 மாநிலங்களவை உறுப்பினா்கள் வென்றிருப்பதன்மூலம், அவா்களின் மாநிலங்களவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, 18-ஆவது மக்களவையின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ( ஜூன் 4), மாநிலங்களவை உறுப்பினா் பொறுப்பிலிருந்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமாக்ய பிரசாத் தாசா, சா்வானந்தா சோனோவால் (அசாம்), மிசா பாரதி, விவேக் தாக்குா் (பிகார்), உதயன்ராஜே போன்ஸ்லே, பியூஷ் கோயல் (மகாராட்டிரம்), தீபேந்தா் சிங் ஹூடா (அரியானா) ஜோதிராதித்யா எம். சிந்தியா (மத்திய பிரதேசம்), கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தான்), விப்லவ் குமார் தேப் (திரிபுரா) ஆகியோரின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு
லெனின்கிரேட், ஜூன் 12 ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளா்களாக பணியமா்த்தப்பட்ட (மேலும்) இரு இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம், இந்தப் போரில் உயிரிழந்த இந்தி யா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளா்களாக பணியமா்த்தப்பட்ட இரு இந்தியா்கள் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவா்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டுவர ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அதிகாரிகளிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷ்ய ராணுவத்தில் உள்ள அனைத்து இந்தியா்களையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 இந்தியா்களை உதவியாளா்களாக ரஷ்ய ராணுவம் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவா்களில் 10 போ் மட்டுமே ரஷ்யாவிலிருந்து இதுவரையில் இந்தியா திரும்பியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment