புதுடில்லி, ஜூன் 11 நேற்று முன்தினம் (9.6.2024) பிரதமராக 3 ஆவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றார். மேலும் ஒன்றிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்றிய அமைச்சரவை தற்போது கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி வருகிறது. ஏனென்றால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சியில் இஸ்லாமியர் இல்லாமல் ஒன்றிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம் நாட்டில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்கவில்லை.
மாறாக பாஜக 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக நேற்று முன்தினம் (9.6.2024) பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகு 72 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு நேற்று (10.6.2024) துறைகள் ஒதுக்கப்பட்டன.
2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி முதல் முறையாகப் பிரதமானார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவ காரத்துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2019 இல் பாஜக 2 ஆவது முறையாக வென்றது. மோடி மீண்டும் பிரதமரானார். அப்போது பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மை விவ காரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி 3 ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார். 2022 இல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பிரதமர் மோடியின் 2.0 ஆட்சி கடைசி 2 ஆண்டுகள் இஸ்லாமிய அமைச்சர் இல்லாமல் கடந்தது.
இத்தகைய சூழலில் தான் தற்போது மீண்டும் மோடி தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய ஆட்சியில் நேற்று முன்தினம் (9.6.2024) ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பிரதமர் மோடி உள்பட 72 பேர் ஒன்றிய அமைச்சரவையில் உள்ள நிலையில் ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
நம் நாட்டில் மக்களவைத் தேர்த லுக்குப் பிறகு அமையும் புதிய ஒன்றிய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைக்கப்பட்ட முதல் ஒன்றிய அமைச்ச ரவை என்ற பெயரை இந்த புதிய அமைச்சரவை பெற்றுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்குக்கூட ஒன்றிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. முன்னதாக இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஒரு இஸ்லா மியருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
மாறாக மக்களவைத் தேர்தலில் மொத்தம் முஸ்லிம்கள் 24 பேரை நாடாளு மன்ற உறுப்பினர்களாக் மக்கள் தேர்வு செய்தனர். இதில் இந்தியா கூட்டணியில் 21 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
No comments:
Post a Comment