கோவை சுப்புவின் பணியை பாராட்டி குறிப்பேட்டில் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

கோவை சுப்புவின் பணியை பாராட்டி குறிப்பேட்டில் தமிழர் தலைவர்

12-4

 

b6-300x156

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஒளிப்படக் கலைஞர் கோவை சுப்பு, தான் ஒருங்கிணைத்த ஒளிப்படக் கண்காட்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குச் சால்வை அணிவித்தும், கலைஞர் படம் வழங்கியும் வரவேற்றார். ஏராளமான படங்களுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த கலைஞர் ஒளிப்படக் கண்காட்சியைச் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்து பார்வையிட்டார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படங்களை மிகச் சிறப்பாக தொகுத்திருந்த ஒளிப்படக் கலைஞர் கோவை சுப்பு அவர்களைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும் புத்தகம் வழங்கியும் பாராட்டுத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment