சென்னை, ஜூன் 15- உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஈக்வினிட்டி இந்தியா, சமூகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மய்யமாகக் கொண்ட அவர்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தின் ஆசனூரில் உள்ள ஜி.டி.ஆர் அரசு மேல்நிலைப் பள்ளியின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
புனரமைப்புக்கு பிறகு பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி 14.6.2024 அன்று ஈக்வினிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமையில், பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் அவுல் அறக்கட்டளையின் நிறுவனர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஜிடிஆர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியை மேற்கொண்டதற்காக ஈக்வினிட்டி இந்தியாவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வகுப்பறைகளில் மேற்கூரை, வளைவு, காப்பு மற்றும் புதிய வண்ணப்பூச்சு உள்ளிட்ட புதிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள், எங்கள் மாணவர்களின் கற்றல் சூழலை கணிசமாக மேம்படுத்தும். இந்த திட்டம் நமது சமூகத்தின் இளைஞர்களின் நல்வாழ்வு மற்றும் கல்விக்கான உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.” என்று கூறினார்.
No comments:
Post a Comment