விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு

சென்னை, ஜூன் 13 விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது திமுக. அமைச்சர் க.பொன்முடி, மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21ஆம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அமைச்சர்கள் க.பொன்முடி, மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அர. சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாளை ஜூன் 14 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment