உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு
புதுடில்லி. ஜூன் 11- நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மறுதேர்வு நடத்த கோரிக்கை
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், இது வரை இல்லாதவகையில் 67 மாணவர்கள், முழு மதிப்பெண்ணான 720 பெற்று முதலிடம் பெற்றனர். ஒரே தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதிய 8 பேர் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்ததும் பிற மாணவர்களுக்கு சந்தே கம் ஏற்படுத்தியது. ஆனால், நேர விரயம், என். சி.இ.ஆர்.டி.பாடப்புத்தகங்கள் மாற்றம் ஆகியவற்றுக்காக நூற்றுக்க ணக்கான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்த தால், அவர்களுக்கு மதிப்பெண் உயர்ந்ததாக தேசியதேர்வுமுகமை விளக்கம் அளித்தது. இருப்பினும், விளக்கத்தை நிராகரித்து, மறுதேர்வு நடத்துமாறு மாணவர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மனு
இந்நிலையில், 1,563 மாண வர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட்தேர்வு எழுதிய ஆந்திராவை சேர்ந்த ஜரிபடே கார்த்திக் உள்ளிட்ட மாணவர்கள், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியி ருப்பதாவது:- நீட்தேர்வு ‘ஆப்லைன்’முறையில் நடத்தப் பட்டது. வினாத்தாள் முன் கூட்டியே தேர்வு மய்யத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனால், தொழில்நுட்பரீதியிலான தாமதத்துக்கு வாய்ப்பில்லை.
பின்வாசல் வழியாக நுழைக்க முயற்சி
எனவே, ‘நேர விரயம்’ என்று காரணம் சொல்லி, கருணை மதிப்பெண் அளித்திருப்பது பின்வாசல் வழியாக சில மாணவர்களை மருத்துவப் படிப்புக்குள் நுழைக்கும் தீய நோக்கமாக தோன்றுகிறது. ஒரே தேர்வு மய்யத்தில் எழுதிய சில மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. வேறு சில மாணவர்கள். 718, 719 என்று மதிப் பெண்கள் பெற்றிருப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
இயல்புநிலைப்படுத்தும் பார்முலா’ என்ற அடிப்படையில், தவறான விடைகளுக்கு கருணை மதிப்பெண் அளித்திருப்பது சட்டவிரோதமானது. தன்னிச்சை யானது. அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது பிரிவுகளை மீறிய செயல்.
‘இயல்புநிலைப்படுத்தும் பார்முலா’ பிழையாக பயன் டுத்தப்பட்டுள்ளது. எங்கள் மனுவை அவசரமாக விசா ரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
-இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment