புதுடில்லி, ஜூன் 11 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது.
ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத் தொகையை கணக்கிடவும், மக்களின் உணவு விருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம் செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வருமானத்தில் இருந்து அசைவ உணவுக்காக 23.5 சதவீதம் செலவழிக்கின்றனர். அதேநேரத்தில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் தங்களது வருவாயிலிருந்து 19.8 சதவீதத் தொகையை அசைவ உணவுகளுக்காக செலவழிக்கின்றனர். இந்தப் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 2 ஆவது இடத்தை அசாம் மாநிலம் பெற்றுள்ளது.
உணவுகளுக்காக செலவிடும் தொகையில் 20 சதவீத தொகையை அசைவ உணவுகளுக்காக அசாம் மாநில மக்கள் செலவிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநில மக்கள் 18.9 சதவீதத் தொகையை செலவழித்து 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர். 4 ஆவது இடத்தை ஆந்திராவும், 5 ஆவது இடத்தை தெலங்கானாவும் பிடித்துள்ளன.
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில மக்கள் பால், பால் பொருட்களுக்காக அதிகம் செலவிடுகின்றனர் என்று என்எஸ்எஸ்ஓ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment