‘நீட்’ தேர்வு குளறுபடி மீதான வழக்கு ‘நீட்’ தேர்வின் ‘புனிதத் தன்மை’ பாதிக்கப்பட்டுள்ளது தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

‘நீட்’ தேர்வு குளறுபடி மீதான வழக்கு ‘நீட்’ தேர்வின் ‘புனிதத் தன்மை’ பாதிக்கப்பட்டுள்ளது தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 12 வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதி மன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எனினும், மருத்துவ கலந்தாய்வை நடத்த தடை இல்லை என்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் நீட் தேர்வு நடப்பதற்குமுன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல, குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மதிப் பெண்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் கூறி 2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் குளறுபடிகள் காணப்படுவதை எளிதாக கடந்து செல்ல முடியாது.

தேசிய தேர்வு முகமைதான் இந்த தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு,மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்த தெளிவான, விரிவான பதில்கள் எங்களுக்கு தேவை. எனவே, நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக பதில் அளிக்க ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) தாக்கீது அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

No comments:

Post a Comment