மின் கட்டண உயர்வு தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு புதுவை பா.ஜ.க. கூட்டணி அரசு தரும் தண்டனையா? - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

மின் கட்டண உயர்வு தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு புதுவை பா.ஜ.க. கூட்டணி அரசு தரும் தண்டனையா?

18-11

புதுவை, ஜூன் 16- புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு வருகிறது. நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (16.6.2024) முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்து பவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.45 ஆக இருந்தது. அது தற்போது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.
100 யூனிட் வரை பயன் படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.
உயர் மின்அழுத்த மின்சாரத்தை பயன்படுத்து பவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6ஆக உயர்ந்துள்ளது.
அவர்களுக்கான நிலைக் கட்டணம் ரூ.420-லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு விவசாயிகளுக்கான நிலைக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment