பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!

புதுடில்லி, ஜூன் 11- பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் இலா­காக்­கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு இருக்­கின்­றன. நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தனிப்பெரும்பான்மையை பெறா­விட்­டா­லும், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தய­வில் ஒன்­றியத்­தில் பா.ஜ.க. ஆட்­சி­ய­மைத்­துள்­ளது.

இத­னி­டையே, 9.6.2024 அன்று டில்­லி­யில் நடந்த பதவியேற்பு விழா­வில் நரேந்­திர மோடி 3ஆவது முறை­யாக பிர­த­ம­ராக பத­வி­யேற்­றார். அவ­ரது தலை­மை­யில் 71 ஒன்றிய அமைச்­சர்­க­ளும் பத­வி­யேற்­றுக் கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், புதிய அமைச்­ச­ர­வை­யின் முதல் கூட்­ட­டம் பிர­த­மர் மோடி தலை­மை­யில் நேற்று (10.6.2024) நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­திற்கு பிறகு யாருக்கு எந்தெந்த துறை என்ற தக­வல் வெளி­யி­டப்­பட்­டது. அதன் விவ­ரம் வரு­மாறு:

ஒன்றிய அமைச்­சர்­கள்

ராஜ்­நாத் சிங் – பாது­காப்பு,
அமித்ஷா – உள்­துறை,
ஜே.பி.நட்டா – சுகா­தா­ரம், ரசா­ய­னங்­கள்,
சிவ்­ராஜ் சிங் சவு­கான் – வேளாண், ஊரக வளர்ச்சி,
மனோ­கர் லால் கட்­டார் – மின்­சா­ரம், வீட்­டு­வ­சதி, நகர்ப்­புற வளர்ச்சி,
நிர்­மலா சீதா­ரா­மன் – நிதி,
ஜெய்­ஷங்­கர் – வெளி­யு­றவு,
அஷ்­வினி வைஷ்­ணவ் – ரயில்வே, தக­வல் மற்­றும் ஒளி­ப­ரப்பு, எலக்ட்­ரா­னிக்ஸ் மற்­றும் அய்டி,
மன்­சுக் மாண்ட்­வியா – தொழி­லா­ளர் நலன், இளை­ஞர் நலன், விளை­யாட்டு,
ஹர்­தீப் சிங் புரி – பெட்­ரோ­லி­யம், இயற்கை எரி­வாயு,
ஜித்­தன் ராம் மஞ்சி – சிறு குறு நடுத்­தர தொழில்­கள்,
தர்­மேந்­திர பிர­தான் – கல்வி,
குமாரசாமி – இரும்பு, கன­ரக தொழில்­கள்,
ராம்­மோ­கன் ராயுடு – விமானப் போக்­கு­வ­ரத்து,
பியூஷ் கோயல் – வணி­கம் மற்­றும் தொழில்­துறை,
ராஜீவ் ரஞ்­சன் சிங் – பஞ்­சா­யத்து ராஜ், மீன்­ வ­ளம், கால்­நடை, பால்­வ­ளம்,
சர்­பா­னந்த சோனோ­வால் – கப்­பல் போக்­கு­ வ­ரத்து, துறை­மு­கங்­கள், நீர்­வ­ழி­கள்,
வீரேந்­திர குமார் – சமூக நீதி,
அன்­ன­பூர்ண தேவி – மக­ளிர், குழந்­தை­கள் மேம்­பாடு,
கிரண் ரிஜிஜு – நாடா­ளு­மன்ற விவ­கா­ரங்­கள்,
சிறு­பான்­மை­யி­னர் நலன்,
சி.ஆர்.பாட்­டீல் – ஜல் சக்தி,
ப்ரக­லாத் ஜோஷி – நுகர்­வோர் நலன், உணவு மற்­றும் பொது­வி­நி­யோ­கம், புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி,
கிரி­ராஜ் சிங் – ஜவுளி, ஜூவல் ஓரம் – பழங்­ கு­டி ­யி­னர் நல விவ­கா­ரம்,
ஜோதிர்த்­தியா சிந்­தியா – கம்­யூ­னி­கே­ஷன்,
வட­கி­ழக்கு நலன்,
பூபேந்­தர் யாதவ் – சுற்­றுச்­சூ­ழல், வனம்,
கஜேந்­திர சிங் ஷெகா­வத் – கலாச்­சா­ரம் மற்­றும் சுற்­றுலா,
கிஷன் ரெட்டி – நிலக்­கரி மற்­றும் சுரங்­கங்­கள்,
சிராஜ் பஸ்­வான் – உணவு பதப்­ப­டுத்­தும் தொழில்­கள்.

தனி பொறுப்­பு­டன் கூடிய இணை அமைச்­சர்­கள் – துறை­கள்

ராவ் இந்­தர்­ஜித் சிங்– புள்­ளி­யி­யல் மற்­றும் திட்ட அம­லாக்க துறை, திட்­ட­மி­டல் துறை,
ஜிதேந்­திர சிங்– அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்பத் துறை, புவி அறி­வி­யல் துறை,
அர்­ஜுன் ராம் மேக்­வால் – சட்­டம் மற்­றும் நீதி துறை,
பிர­தாப்­ராவ் கண­பத்­ராவ் ஜாதவ்– ஆயுஷ் துறை,
ஜெயந்த் சவுத்ரி– திறன் மேம்­பாடு மற்­றும் தொழில் முனை­வோர் துறை

இணை அமைச்­சர்­கள் – துறை­கள்

ஜிதின் பிர­சாத் – வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை, மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்பத் துறை (இணை அமைச்­சர்),
சிறீபாத் நாயக்– மின் துறை, புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் (இணை அமைச்­சர்),
பங்­கஜ் சவுத்ரி– நிதித்­துறை (இணை அமைச்­சர்),
கிரி­ஷன் பால் குர்­ஜார்– கூட்­டு­ற­வுத்­துறை (இணை அமைச்­சர்),
ராம்­தாஸ் அத்­வாலே– சமூக நிதி மற்­றும்
அதி­கா­ர­ம­ளித்­தல் (இணை அமைச்­சர்),
ராம் நாத் தாக்­கூர்– வேளாண் துறை (இணை
அமைச்­சர்),
நித்­யா­னந்த் ராய்– உள்துறை (இணை அமைச்­சர்),
அனுப்­ரியா பட்­டேல்– சுகா­தார துறை, கெமிக்­கல் துறை (இணை அமைச்­சர்),
வி சோமண்ணா– ஜல்­சக்தி, ரயில்வே துறை (இணை அமைச்­சர்),
டாக்­டர் சந்­திர சேகர் பெம்­மா­சானி– ஊரக வளர்ச்சி, தக­வல் தொடர்பு துறை (இணை அமைச்­சர்),
எஸ்பி சிங் பாகேல்– மீன்­பிடி, கால்­நடை பரா­ம­ரிப்பு மற்­றும் பால்­வள துறை, பஞ்­சா­யத்து ராஜ் துறை (இணை அமைச்­சர்),
ஷோபா கரந்த்­லாஜே– சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில்­துறை (இணை அமைச்­சர்),
கீர்த்தி வர்­தன் சிங்– சுற்­றுச்­சூ­ழல், வனம் மற்­றும் கால­நிலை மாற்­றம் துறை, வெளி­யு­ற­வுத் துறை (இணை அமைச்­சர்),
பிஎல் வர்மா– நுகர்­வோர் விவ­கா­ரங்­கள், உணவு
மற்­றும் பொது விநி­யோக துறை, சமூக நீதி மற்­றும் அதி­கா­ர­ம­ளித்­தல் (இணை அமைச்­சர்),
சாந்­தனு தாக்­கூர்– துறை­மு­கங்­கள், கப்­பல்
போக்­கு­வ­ரத்து மற்­றும் நீர்­வ­ழி­கள் போக்­கு­வ­ரத்து (இணை அமைச்­சர்),
சுரேஷ் கோபி– பெட்­ரோ­லி­யத்­துறை, சுற்­று­லாத்­ துறை (இணை அமைச்­சர்),
எல் முரு­கன்– தக­வல் மற்­றும் ஒலி­ப­ரப்பு துறை, நாடா­ளு­மன்ற விவ­கா­ரத் துறை (இணை அமைச்­சர்),
அஜய் தம்தா – சாலை போக்­கு­வ­ரத்­துத் துறை (இணை அமைச்­சர்),
பாண்டி சஞ்­சய் குமார்– உள்­துறை (இணை
அமைச்­சர்),
கம­லேஷ் பாஸ்­வான்– ஊரக வளர்ச்­சித் துறை (இணை அமைச்­சர்),
பகீ­ரத் சவுத்ரி– வேளாண் துறை (இணை அமைச்­சர்),
சதீஷ் சந்­திர துபே– நிலக்­கரி துறை, சுரங்­கத்­துறை (இணை அமைச்­சர்),
சஞ்­சய் சேத்– பாது­காப்பு துறை (இணை அமைச்­சர்),
ரவ்­னீத் சிங் பிட்டு– உணவு பதப்­ப­டுத்­து­தல், ரயில்வே துறை (இணை அமைச்­சர்),
துர்கா தாஸ் உய்கே – பழங்­கு­டி­யி­னர் விவ­கா­ரத் துறை (இணை அமைச்­சர்),
ரக்ஷா காட்சே– இளை­ஞர் விவ­கா­ரங்­கள் மற்­றும் விளை­யாட்­டுத் துறை,
சுகந்தா மஜும்­தார்– கல்­வித்­துறை, வட­கி­ழக்கு
விவ­கா­ரங்­கள் துறை,
சாவித்ரி தாக்­கூர்– பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் மேம்­பாட்­டுத் துறை,
டோகன் சாஹு– நகர்ப்­புற மேம்­பாட்டு, வீட்டு
வச­தித்­துறை (இணை அமைச்­சர்),
ராஜ்­பூ­ஷன் சவுத்ரி– ஜல்­சக்தி துறை (இணை அமைச்­சர்),
பூப­தி­ராஜு சிறீனி­வாச வர்மா– கன­ரக தொழில்­துறை, இரும்பு துறை (இணை அமைச்­சர்),
ஹர்ஷ் மல்­ஹோத்ரா– சாலை போக்­கு­வ­ரத்து துறை, கார்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் துறை (இணை அமைச்­சர்),
நிமு­பென் ஜெயந்­தி­பாய் பாம்­பா­னியா– நுகர்­வோர் விவ­கா­ரங்­கள், உணவு மற்­றும் பொது விநி­யோக துறை (இணை அமைச்­சர்),
முர­ளி­தர் மோஹோல்– கூட்­டு­ற­வுத்­துறை, சிவில் விமான போக்­கு­வ­ரத்­துத் துறை (இணை அமைச்­சர்),
ஜார்ஜ் குரி­யன்– சிறு­பான்­மை­யி­னர் விவ­கா­ரத் துறை, மீன்­பிடி, கால்­நடை பரா­ம­ரிப்பு மற்­றும் பால்­வ­ளத்­துறை (இணை அமைச்­சர்),
பபித்ரா மார்­கெ­ரிட்டா– வெளி­யு­ற­வுத்­துறை, ஜவுளித்­துறை (இணை அமைச்­சர்)

No comments:

Post a Comment