அறிவியல் துணுக்குகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

அறிவியல் துணுக்குகள்

*மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

* ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.

* உடலில் ‘டாட்டு’ (செயற்கை பச்சை) குத்திக் கொள்வது தற்போது பிரபலமாகி வருகிறது. சுவீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலை ‘டாட்டு’களால் புற்றுநோய் வரும் வாய்ப்பு, 21 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளது. பாதுகாப்பான வகையில் ‘டாட்டு’களை வரைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment