ஊற்றங்கரை, ஜூன் 12- ஊற்றங்கரை பகுதியின் மூத்த பத்திரிக்கையாளரும், ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியாளராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவருமான பெரியார் பெருந்தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் கீ.அ. கோபால் அவர்கள் 9.6.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் இயற்கை எய்தினார்.
கீ.அ.கோபால் அவர்களின் உடல் அவரது கீழ்குப்பம் இல்லத்தில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக் கப்பட்டிருந்தது.10.6.2024 அன்று காலை 10.30 மணியள வில் கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட கழக செயலாளர் செ.பொன்முடி, ஊற்றங்கரை ஒன்றிய கழகத் தலைவர் அண்ணா.அப்பாசாமி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் ஆகியோர் இணைந்து மறைந்த கீ.அ.கோபால் அவர்களின் உடல்மீது கழகக்கொடி போர்த்தி கழகத் தோழர்களால் ஒலிமுழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கழக சொற்பொழிவாளர் பழ.வெங்கடாசலம், பெரியார் சமூக காப்பு அணியின் மேனாள் பயிற்றுநர் வெ.அழகுமணி, மாவட்ட துணைத் தலை வர் வண்டி.ஆறுமுகம் மேனாள் மாவட்ட செயலர் க.மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு, மாவட்ட ப.க.பொறுப்பாளர் சித.அருள், மேனாள் ஒன்றிய செயலர் மாறன்.இரவி உள்ளிட்ட திரா விடர் கழகத் தோழர்கள் பலரும் மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்
பின்னர் நடைபெற்ற இரங் கல் கூட்டத்தில் மாவட்ட ஒன் றிய கழக பொறுப்பாளர்கள் உரையாற்றியதுடன், திமுக ஊற்றங்கரை ஒன்றிய மத்திய செயலாளர் எக்கூர் செல்வம், ஒன்றிய திமுக வடக்கு செயலாளர் குமரேசன், போச்சம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சாந்தமூர்த்தி திமுக விவசாய அணி மாநில துணைத் தலைவர் அரியண்ணன், அ.இ.அ.தி.மு.க மேனாள் சட்டமன்ற உறுப்பினர் முனி.வெங்கட்டப்பன், மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் குப்புராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக பொறுப்பாளர்களும், ஊற் றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் தலைவர் சிவலிங்கம் செயற்குழு தலைவர் முருகேசன், கோபால் , சிறீரங்கன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர்.இ.சாகுல்அமீது உள்ளிட்ட தமிழ் பற்றாளர்களும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வீரவணக்கத்தையும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கும் உறவினர் களுக்கும் தோழர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்
மறைந்த கீ.அ.கோபாலன் அவர்களின் மருமகனும், திமுக பர்கூர் தொகுதியின் பார்வையாளருமான பி.டி.அன்பரசன் கண்ணீரோடு தனது மாமனார் குறித்து உரையாற்றி அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்று இரங்கலுரை ஆற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இரங்கல் கூட்டத்தின் நிறைவாக மறைந்த கீ.அ.கோபால் அவர்களின் மகன் புயல் நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment