சென்னை, ஜூன் 14 குவைத் நாட்டில் நேரிட்ட தீ விபத்தில் இறந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பரி தாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு (64), மங்காஃப்நகரில் கேரளாவைச் சேர்ந்தவரின் பல்பொருள் அங்காடியில் 26 ஆண்டுகளாக மேற்பார்வை யாளராகப் பணிபுரிந்து வந்தார். விசா முடிவதால் வரும் 21-ஆம் தேதி சொந்த ஊர் செல்ல விமான பயணச் சீட்டும் எடுத்திருந்தார். இந்நிலையில், தீ விபத்தில் பலத்த காயமடைந்த ராமு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
செஞ்சி, காட்டுமன்னார்கோவில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் (36) கடந்த 14 ஆண்டுகளாக மங்காஃப் நகரில் உள்ள‘மெட்டீரியல் ஸ்டீல் சில்வர்’ நிறுவனத்தில் போர்மேனாகப் பணியாற்றி வந்தார். விபத்தின்போது அவர் தங்கியிருந்த இடத்திலேயே தீயில் சிக்கி உயிரிழந்த தகவல்,அவரது உறவினர்கள் மத்தியில்கடும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
இதேபோல, கடலூர் மாவட்டம ்காட்டுமன்னார்கோ வில் அருகேயுள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்ன துரை(42) என்பவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் நிறுவனம் ஒன்றில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விரைவில் ஊர் திரும்பலாம் என்று திட்டமிட்டிருந்த சூழலில், அவர் தீ விபத்தில் சிக்கி,உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(41) கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார். தீ விபத்தில் காயமடைந்த மாரியப்பன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி வானரமுட்டி கிராம மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனி விமானம் மூலம்…
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் நேரிட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாரியப்பன், திருச்சி ராஜு, கடலூர் சின்னதுரை, சென்னை சிவசங்கர், தஞ்சை ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் ராமு, விழுப்புரம் முகமது ஷெரீப் ஆகியோர் இறந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அவர்களது உடல்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவந்து, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ளது.
இந்த கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் தொடர்பான விவரங்களைத் திரட்ட அயலகத் தமிழர் மறுவாழ்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த துறையினர் உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடையத் தேவையான உத விகளை இந்திய தூதரகத்துடன் இணைந்து, அயலகத் தமிழர் நலத் துறை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்பு எண்கள் அறிவிப்பு: விபத்து குறித்த விவரங்களை அறிய இந்தியாவுக்குள் 91 1800309 3793, குவைத்தில் 91 80 6900 9900, 91 80 6900 9901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment