தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்கு விழுக்காடு 46.97 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்கு விழுக்காடு 46.97

featured image

சென்னை, ஜூன் 7- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 46.97 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா. ஜனதா கூட்டணி 18.28 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட் டியிட்டது. எனவே, இந்த தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது. அதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணிக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.. எஸ்.டி.பி.அய்.. புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. த.மா.கா.. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜனதா கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றன.

இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.-20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் – 10.67 சதவீத வாக்குகள் பெற்றிருக்கின்றன.

வாக்குகளும், சதவீதமும்…
கட்சிகள்                                    வாக்குகள் சதவீதம்
தி.மு.க. கூட்டணி                      2,04,86,693 46.97
அ.தி.மு.க. கூட்டணி                 1,00,55,124 23.05
பா.ஜனதா கூட்டணி                79,73,801 18.28
நாம் தமிழர் கட்சி                      35,31,364 8.10
சுயேச்சைகள்                               11,59,998 2.66
நோட்டா                                            4,67,068 1.07

No comments:

Post a Comment