25 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

25 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா

featured image

சென்னை, ஜூன் 6- “இரண்டு எம்.பி.,க்களை பெற்றதன் வாயிலாக, மாநில கட்சி அந்தஸ்தைப் பெற்றது, கால் நூற்றாண்டுக்கும் மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திரு மாவளவன் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கி றது. இந்த தேர்தலில், சிதம்பரத்தில் போட்டி யிட வேண்டாம்; வேறு தொகுதியில் போட்டியி டுமாறு, பலரும் ஆலோ சனை கூறினர். ஆனால், சிதம்பரம் தொகுதி என்பது என் தாய்மடி.

எனவே, இங்கு போட்டியிடுவதில் உறுதியாக இருந்தேன். என் நம்பிக்கையை உறு திப்படுத்திய சிதம்பரம் மக்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.

தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு பா.ஜ.க.வின் வெற்றியை, ‘இந்தியா’ கூட்டணி தடுத்துள்ளது. மோடி அலை என்பது மாயை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சிதம்பரம், விழுப்புரம் என, இரண்டு தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றுள்ளது.

இதன் வாயிலாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை, வி.சி.க. பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

கடந்த 1999 முதல் தேர்தல் களத்தில் இருக்கும் எங்களின் கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு, உழைப்பிற்கு, மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது.

– இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment