ஜூன் 24இல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

ஜூன் 24இல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடுகிறது

featured image

சென்னை, ஜூன்8 தமிழ் நாட்டில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடுவதாக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு அறி வித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேர வையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ஆம் தேதிஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15–ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடை பெற்றது. நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவா தத்துக்கு பதில் அளித்தார். இதையடுத்து, இந்த 2024-2025 நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19-ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிப்.20-ஆம் தேதியும் தாக்கல் செய்தனர். அதன்பிறகு, நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் பிப்.22-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினர்.

வழக்கமாக நிதிநிலை அறிக்கையை ஒட்டி, துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால், மக்களவை தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்ப டையில், மானிய கோரிக்கை விவாதம் தொடர்ந்து நடத்தப்படவில்லை. பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை நேற்று (7.6.2024) சந்தித்தார். அப்போது அவர், ‘‘ஜூன் 24 காலை 10 மணிக்கு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 -ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும்’’ என்றார்.
இதையடுத்து, பேரவைச் செயலர் கி.சீனி வாசன் வெளியிட்ட அறிவிப்பில்: ‘தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை ஜூன் 24-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்’ என அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகையில் பயனாளிகள் எண்ணிக்கையை உயர்த்துவது, தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இக்கூட் டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.

No comments:

Post a Comment