2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய பா.ஜ.க. அமைச்சர்கள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய பா.ஜ.க. அமைச்சர்கள்

புதுடில்லி, ஜூன் 10 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றிய அமைச்சர்களில் 20 பேர் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகின, பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், இதரவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்த ஒரு தனிக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளோடு இனைந்து பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மோடிக்கு கிடைத்த வெற்றி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாஜக அரசின் கடந்த ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும்கூட இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இந்த ஒன்றிய அமைச்சர்களில் சிலர் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இவர்களில் அமேதியில் ஸ்மிருதி இரானி மேஜிக் எண்ணைத் தொடத் தவறிய ஒன்றிய அமைச்சர்களின் முதல் வரிசையில் நிற்கிறார். அடுத்ததாக திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகரின் தோல்வி, குந்தியில் அர்ஜுன் முண்டாவின் தோல்வி, சண்டவுலியில் சமாஜ்வாடி கட்சியின் பிரேந்திர சிங்கிடம் மகேந்திர நாத் பாண்டே தோல்வி, லக்கிம்பூர் கெரியில் அஜய் மிஸ்ரா தேனியின் தோல்வி ஆகியோர் வெற்றி பெற முடியாத மற்ற ஒன்றிய அமைச்சர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment