கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18 அன்று காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18 அன்று காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

திருப்புவனம், ஜூன் 14- கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப்பணியை வரும் 18ஆம் தேதி காணொலி மூலம் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே யுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு இதுவரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல, அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள் ளிட்ட இடங்களிலும் அகழா ய்வுகள் நடைபெற்றன.

இங்கு பல்லாயிரக்க ணக்கான தொல்பொருட் கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையி டும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை தினமும் ஆயிரக் கணக்கானோர் பார்வை யிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழடி யில் 10ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடியைஅரசு ஒதுக்கியது. அப்போது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கீழடியில் அகழாய்வு ப் பணியை தொடங்கவில்லை.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப் பணியை வரும் 18ஆம்தேதி முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுக ளை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment