கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* நீட் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது.
* பாஜகவின் ஆணவம்.. 241 இடங்களை மட்டுமே தந்த “ராமன்”- இப்படி விளாசியது ஆர்.எஸ்.எஸ். இந்திரேஷ் குமார்!

தி இந்து:

*’பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும்’ சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என பத்திரிகை யாளர் சங்கங்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் கோரிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வில் பீகாரில் “நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது” என பொருளாதார குற்றவியல் பிரிவு கருத்து.
* மோடி ஆட்சியில் நீட் என்பது ‘சீட்’ (ஏமாற்று). பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்: காங்கிரஸ் கேள்வி.
* கோத்ரா மய்யத்தில் நீட் தேர்வில் ஊழல் – அய்ந்து பேரை கைது செய்தது குஜராத் காவல்துறை
*அயோத்தி: கோயில் நகரத்தில் காவி கட்சியின் சூரிய அஸ்தமனம். அயோத்தியில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஹிந்துத்துவாவை தூண்டும் அரசியல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறார் கட்டுரையாளர்

இஷிதா மிஸ்ரா
தி டெலிகிராப்:

* 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு சமாஜ்வாதி கட்சியினரை அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தல். அயோத்தி மாவட்டத்தின் பைசாபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றதன் மூலம், வெறுப்பு அரசியலுக்கு பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என பாராட்டு.
* 1999 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மைனர் மகன்களைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்த தாரா சிங்கின் விடுதலைக்காக சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர் தான் இன்றைய ஒடிசா முதலமைச்சர் பாஜகவின் மோகன் சரண் மாஞ்சி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முதியவர்களில் மூன்றில் ஒருவருக்கு கடந்த ஓராண்டில் வருமானம் இல்லை, 29% பேருக்கு மட்டுமே ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவை கிடைக் கின்றன என்கிறது தனியார் நிறுவன ஆய்வு அறிக்கை.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment