இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ. 20 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ. 20 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

featured image

சென்னை ஜூன் 14 சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், மற்ற நகரங்களில் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் மூத்த வழக்குரைஞர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் நல நிதிச்சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக்கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஃபரிதா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.கும ரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “வழக்குரை ஞர்கள் நல நிதியத் திட்டத்தின் கீழ் இளம் வழக்குரைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி –- காரைக்கால் வழக்கு ரைஞர்கள் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து கருத்து ருக்களை இறுதி செய்ய வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரத்தையும், மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.15 ஆயிரத்தையும் மூத்த வழக்குரைஞர்கள் வழங்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து வழக்குரைஞர்களுக்கும் நான்கு வாரங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

இளம் வழக்குரைஞர் களுக்கான உதவித் தொகையை எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment