கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.6.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.6.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் விவகாரத்தில் அதிரடி. கருணை மதிப்பெண்கள் ரத்து! 1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு.
*நீட் தேர்வு ரத்து குறித்த பிரச்சினை நாடாளு மன்றத்தில் எதிரொலிக்கும் – காங்கிரஸ்.

தி இந்து:

* என்.டி.ஏ. அமைச்சரவையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் சரண்சிங் பேரன் ஜெயந்த், இதர வட இந்திய அமைச்சர்கள் போல ஹிந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாராமதி தோல்விக்குப் பிறகு அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ததால்,

அஜித் பவார் என்.சி.பி.யில் கடும் அதிருப்தி

* ஓராண்டில் என்டிஏ அரசு கவிழும்; இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வாய்ப்பு, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேட்டில் இருந்து கவ னத்தை திசை திருப்பும் முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடு படக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

தி டெலிகிராப்:

* மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூன் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜம்மு – காஷ்மீர் ரியாசி மற்றும் கதுவாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஏன் பதில் அளிக்க மறுக்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம்.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment