சென்னை,மே 10- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளி யாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளி யுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்ட மான ஆர்.டி.அய்., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961இல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில், 1973இல் நடந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டது. அதற்கு மறுஆண்டில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி யிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறப்பட் டுள்ளது. கலைஞருக்கு தெரிந்தே கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 1974இல் கலைஞர் கருணாநிதியும், வெளியுறவு துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள், தற்போதைய ஆர்.டி.அய்., தகவல்கள் வாயிலாக வெளிவந்துள்ளன.
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை மட்டுமே தி.மு.க., குறை சொல்லி வந்தது. உண்மையில், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில், தி.மு.க.,வுக்கும் முழுப் பங்கு உண்டு. இவ்வாறு அண்ணா மலை கூறினார்.
இதையடுத்து, ஆர்.டி.அய்., ஆவணத் தின் உண்மைத்தன்மை குறித்து, தி.மு.க., தரப்பில் அப்போதே சந்தேகம் எழுப்பப் பட்டது. அதற்கு அண்ணாமலை, ‘ஆர்.டி.அய்., ஆவணத்தை பச்சைப் பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா?’ என்று கேட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியும், கச்சத்தீவு விவகாரத்தில், தி.மு.க.,வும், காங்கிரசும் சேர்ந்து தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
தற்போது, கச்சத்தீவு தொடர்பாக வெளியான ஆர்.டி.அய்., ஆவணம் போலியானது என்ற தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து, சில ஆவணங்களை பதிவிட்டு, ஊடகவியலாளர் அரவிந் தாக் ஷன் தன், ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறி யுள்ளதாவது:
கடந்த மார்ச் 5இல் கச்சத்தீவு தொடர் பான ஆவணங்களை கோரி, அண்ணா மலை விண்ணப்பம் செய்துள்ளார். மார்ச் 5இல் பெறப்பட்ட விண்ணப்பத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணி யாற்றும் உயர் அதிகாரி ஒருவர், அதே துறையின் கீழ்நிலை செயலராக பணி யாற்றும் அஜய் ஜெயின் என்பவருக்கு, உரிய பதில்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.
மோசடி
அதன்படி, அஜய் ஜெயின் என்பவர் மார்ச் 31இல், 17 பக்க பதிலை வழங்கி, விண்ணப்பத்தை முடித்து வைக்கிறார். அண்ணாமலையின் ஆர்.டி.அய்., விண் ணப்பத்துக்கு பதில் வழங்கிய நபரின் பெயர் அஜய் ஜெயின். ஆனால், வெளி யுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில், அஜய் ஜெயின் என்ற அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
அதேநேரம், ஆர்.டி.அய்., வாயிலாக, வெளியுறவுத் துறையில் கீழ்நிலை செய லராக பணியாற்றும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டன. அதில், இருவரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அதில், அஜய் ஜெயின் என்பவர் பெயர் இடம் பெறவில்லை. அப்படியானால், வெளியுறவு அமைச் சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில், மோசடியாக சட்டவிரோதமாக ஆவ ணத்தை வெளியிட்டனர் என்று எடுத்துக் கொள்ளலாமா? மொத்தத்தில் இல்லாத ஒன்றை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய முயன்று உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஆங்கில நாளேடு
இந்த சர்ச்சை குறித்து, தி.மு.க. செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் கூறியதாவது:
கச்சத்தீவு குறித்து எந்த அதிகாரி பெயரில், ஆர்.டி.அய்., ஆவணம் வெளியிடப்பட்டதோ, அப்படி ஒரு அதிகாரியே அந்தத் துறையில் இல்லை. அரசின் துறை சார்ந்து ஆர்.டி.அய்., வாயிலாக ஆவணத்தை கேட்கும்போது, தகவல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அதைக் கொடுக்கவில்லை.
அரசின் கீழ்நிலை செயலர் அளித்த ஆவணத்தில் உள்ள தேதியில் தான், ஆங்கில நாளேடு ஒன்றில் கச்சத்தீவு குறித்த கட்டுரையும் வெளியானது. அப்படியானால், ஆவணம் வெளியான தேதிக்கு முந்தைய நாளே, ஆங்கில நாளேட்டுக்கு தகவல் போனது எப்படி; திட்டமிடாமல் யார் அதை செய்திருக்க முடியும்? ஆர்.டி.அய்., ஆவணத்தை அலுவல் நேரப்படி காலை 10:00 முதல் மாலை 5:00 மணிக்குள் தான் கொடுத் திருக்க வேண்டும்.
முதல் நாளே நாளேட் டுக்கு தகவல் சென்ற பின்னணி என்ன?
அந்த செய்தி, தங்களுக்கு எப்படி வந்தது என்பது குறித்து, அந்த நாளேடும் கூறவில்லை. ஆனால், அதை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறார். ஒன்றிய அரசின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி, தனக்கு வேண்டிய தகவலை எளிதாக பெற முடியும். இருந்தும், எல்லா விடயங்களிலும் பா.ஜ.க. சதி செய்தே பழக்கப்பட்டு விட்டது என்பதால், இந்த விடயத்திலும் ஏதோ ஒரு சதியை கட்டமைக்க முயன்றுள்ளனர்.
யாரோ ஒரு அதிகாரி வெளியிட்ட தகவலை வைத்து, நாட்டின் நிர்வாக தலைமையாக உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடியே பேசுகிறார் என்றால், அவரைப் பற்றி எந்தவிதமான மதிப்பீட்டுக்கு மக்கள் வருவர் என்ப தையும் பார்க்க வேண்டும்.
நாடகம்
முன்னதாக இந்த விடயத்தை, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை பேசுவதும், அவரைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பேசு வதுமாக பெரிய நாடகமே நடத்தினர்.
எந்த விடயத்திலுமே, பா.ஜ.க. தலைவர்கள் உண்மையே பேசுவதில்லை என்பதற்கு, சமீபத்திய உதாரணம் தான் இந்த கச்சத்தீவு விவகாரம். இன்னும் மக்களவைத் தேர்தலே முடிவடைய வில்லை. அதற்குள் பா.ஜ.க. திட்டமிட்டு பரப்பிய அவதூறு எடுபடாமல் போய், அவர்கள் சதி அம்பலப்பட்டு விட்டது.
காங்கிரசுக்கு தேசப்பற்று இல்லை என்பதைக் காட்டுவதற்காக, இல்லாத ஒரு தகவலை வைத்து, பா.ஜ.க. திட்டமிட்டு அரங்கேற்றிய சதிக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர். கச்சத்தீவு விவ காரத்தில், தி.மு.க.,வையும், காங்கிரசையும் சேர்த்தே குற்றம் சுமத்தினர். குட்டு வெளிப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தரப்பு மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற் கொள்வது குறித்து, இரு தரப்பும் பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment