கல்லக்குறிச்சி, மே 11- கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பகுத்தறிவாளருமா கிய பெரியார் பெருந் தொண்டர் இரா.நல்ல முத்து (வயது 90) 9.5.2024 அன்று காலை 10 மணிய ளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இந்தியன் வங்கியில் நீண்ட காலம் நகை மதிப் பீட்டாளராக இருந்து தந்தை பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கைகளை தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும், பரப்பியவர். தன் குடும்ப உறுப்பினர்களையும் கழக கொள்கை குடும்ப மாக வைத்திருந்தவர். கழக மாநாடுகள், கண் டன ஆர்ப்பாட்டங்கள் போன்றவைகளில் தவறா மல் கலந்து கொள்பவர். ‘விடுதலை’ இதழின் தொடர்ச்சியான வாச கர். மாநாடுகளுக்கு நன் கொடைகளையும் வழங்கி கலந்து கொள்பவர்.
அவரின் இறுதி நிகழ் வில் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ் கர், தலைமையில் மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்ப ராயன், மாவட்ட கழக துணைத்தலைவர் குழ. செல்வராசு, மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.முத்து வேல், நகர தலைவர் இரா.முத்துசாமி; செயலாளர் நா.பெரியார் உள்பட பலர் கலந்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
Saturday, May 11, 2024
வருந்துகிறோம் கல்லக்குறிச்சி இரா.நல்லமுத்து மறைந்தாரே!!!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment