சென்னை தொழிலதிபர் திருமதி சரோஜ் கோயங்கா அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

சென்னை தொழிலதிபர் திருமதி சரோஜ் கோயங்கா அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

11-35

சென்னையை வாழ்விட மாகப் பல ஆண்டு காலம் கொண்டிருந்தவரும், சிறந்த நிர்வாகத் திறமையாள ருமான திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் இன்று 24.5.2024 முற்பகல் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் – சென்னை எக்ஸ்பிரஸ் மால் முதலிய பலவற்றை தனது முதுமை யிலும் சிறப்பாக நடத்தி வந்தவர். எவரிடமும் பான்மையுடனும், பண்புடனும் பழகியவர். அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், அவ்வமைப்புகளின் ஊழியர்கள் அனைவருக்கும் நமது ஆறுதல் – மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

நெருக்கடி கால நிலையை துணிவுடன் எதிர்த்து நின்றவர், கல்வி வள்ளல் காமராசரின் மிக நெருங்கிய நண்பரான தொழிலதிபர் இராம்நாத் கோயங்காவின் மருமகள் திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் மிக்க அம்மணியார்.

தலைவர்,

24.5.2024 திராவிடர் கழகம்

 

No comments:

Post a Comment