இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப் பினரும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகி றோம்.
50 ஆண்டு காலம் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிறந்த பொதுநலத் தொண்டராக உழைத்தவர். நாகை மக்களவை உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக் கப்பட்டவர்.
எளிமையானவர் – பழகுவதற்கு இனிமையானவர். அவரது இழப்பு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்குப் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் பெரிதும் துயருறும் குடும்பத் தாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் கழகத் தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
13.5.2024 தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், முதலியோர் கழகத்தின் சார்பில் இறுதி நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்துவ
No comments:
Post a Comment