படிப்படியாக வெப்பநிலை மீண்டும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

படிப்படியாக வெப்பநிலை மீண்டும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

featured image

சென்னை, மே 24 தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கிய சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித் ததை பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், அதன் பிறகு பரவலாக மழை கொட்டத் தொடங்கியது. அதிலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட் டங்கள், வட உள் மாவட்டங்கள் என அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கேரள கடற் கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக் கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. அதன் படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னல் மற்றும் 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்திலான பலத்த காற்றுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண் டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இன்று (24.5.2024) முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோடை மழை பரவலாக பெய்து வந்த தால், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில், இன்று (24.5.2024) முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இயல்பையொட்டியும், இவ்வார இறுதி வரை இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள கடற்கரையையொட்டி அரபிக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற் றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்ல உள்ளது. இது புயலாக மாறுமா? அல்லது தாழ்வுப் பகுதி நிலையிலேயே அதிக மழையை அந்த பகுதிகளையொட்டிய இடங்களில் பெய் யுமா? என்பதை வரக்கூடிய நாட்களில் தெரியவரும். அந்த வகையில் பார்க் கும்போது, கேரளாவில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று முன்கூட் டியே தொடங்குவதற்கான வாய்ப்பு இருப் பதாகவே சொல்லப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், கருநாடகா, கேரளா, லட் சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், கேரளா, லட் சத்தீவு-மாலத்தீவுகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்ப தாலும் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று எச் சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

No comments:

Post a Comment