கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.5.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
– மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டு போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
– மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிப்பு
– இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து வரும் சீனா குறித்து பிரதமர் மோடி மவுனம் காக்கிறார், மல்லி கார்ஜூனா கார்கே கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
– இந்திய அணி ஏற்கெனவே 272 இடங்களின் பாதியை கடந்துவிட்டது: அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாஜக பிரசாரம் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேச்சு.
– டில்லி வாக்காளர்களில் மேல்தட்டு வாக்காளர்கள் பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் இந்தியாவின் பெருமை குறித்து பேசுகிறார்கள். அடித்தட்டு மக்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து கவலை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
– இந்த தேர்தலில் பிஜேபிக்கு இறுதி விடை கொடுக்கப்படும். ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப் படும் போது, அது பலருக்கு சுதந்திர நாளாக இருக்கும். ஜூன் 5 இந்தியா கூட்டணி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பிடிஏ ஆட்சியில் அமரும். இது ஒரு வரலாற்று நாளாகவும் அனைவருக்கும் கொண்டாட்ட நாளாகவும் இருக்கும் என அகிலேஷ் பேட்டி.
– வாக்கு வங்கி அரசியலுக்காக அழகிகள் போல் ஆட்டம்: இந்தியா கூட்டணி குறித்து மோடி சர்ச்சை பேச்சு
– நாட்டின் வரலாற்றில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத இது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக் கிறார் என பிரியங்கா சாடல்.
– பிரதமரின் உரைகளின் கண்ணியம் மற்றும் பாஜகவின் இருக்கைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைகின்றன என ராகுல் பதிவு.
– வெயிலில் பிரச்சாரம் செய்வது மனதை அதிகம் பாதித்து இருக்கலாம். இதற்காக மோடி ஏதாவது மருந்து எடுத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் ஊடகம், விளம்பரத் துறை தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் தளத்தில் பதிவு.
தி டெலிகிராப்:
– உத்தரப்பிரதேசம்: காஜியாபாத்தில் பெண்கள் குளிய லறையில் கேமராவை வைத்த கோயில் அர்ச்சகர் மீது வழக்கு பதிவு
– குடந்தை கருணா
No comments:
Post a Comment