இந்தியாவின் பொருளாதார நிலை ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

இந்தியாவின் பொருளாதார நிலை ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, மே 12 இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
26.4.2024ஆம் தேதி முடிவில் நாட்டின் அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.412 பில்லியன் டாலர் குறைந்து 637.922 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

தங்கம் கையிருப்பில் சரிவு.. ஆர்பிஅய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.28 பில்லியன் டாலர் குறைந்து 640.33 பில்லியன் டாலர்களாக இருந்தது என அறிவித்தது. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 5 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் அந்நிய செலாவணி சாதனை அளவாக 648.562 பில்லியன் டாலர் அளவீட்டுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2021 இல் எட்டப்பட்ட 642.453 பில்லியன் டாலர் என்ற முந்தைய சாதனை அளவீடு மார்ச் மாதத்தில் தகர்க்கப்பட்டு, ஏப்ரல் 5ஆம் தேதி புதிய உச்சம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் வெளிநாட்டு நாணய சொத்துகள் (திஷீக்ஷீமீவீரீஸீ சிuக்ஷீக்ஷீமீஸீநீஹ் கிssமீts) முக்கிய பகுதியாக விளங்குகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி முடிந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய சொத்துகள் அளவு 1.159 பில்லியன் டாலர் குறைந்து 559.701 பில்லியன் டாலர்களாக உள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் என்பது டாலரில் மதிப்பிடப்படுகிறது. ஆனால் இதில் டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற நாணயங்களின் மதிப்பு உள்ளது. மேலும் வெளி நாட்டுக் கையிருப்பின் மொத்த ஏற்றம் அல்லது இறக்கம் வெளிநாட்டு நாணய சொத்துகளில் கணக் கிடப்படும்.
வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் அடுத்த முக்கிய பங்கீடு தங்கம் கையிருப்பு, ஏப்ரல் 26 ஆம் தேதி முடிந்த வாரத்தில் 1.275 பில்லியன் டாலர் குறைந்து 55.533 பில்லியன் டாலர்களாக உள்ளது. தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது.

No comments:

Post a Comment