உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழின் 90ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.50,000/-அய் திண்டுக்கல் க.பரமச்சந்திரன், இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசனிடம் வழங்கினர். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர்
இரா.வீரபாண்டியன், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளர் மு.நாகராசன், துணைச் செயலாளர் தி.க.செல்வம், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, நகர செயலாளர்
த.கருணாநிதி, பசீர் அகமது, விமல் சந்தோஷ் ஆகியோர் உள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர், திமுக மாநகர செயலாளர் சண். இராமநாதன் அவர்கள் ஜூன் 1-ஆம் தேதி 90 ஆவது பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 20 ஆண்டு சந்தா தொகை ரூ.40,000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகரஇணைச்செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (24-05-2024)
No comments:
Post a Comment